வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது தள்ளி போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நாளைக்கு பதிலாக நாளை மறுநாள் நவம்பர் 30ம் தேதியன்று அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.