சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. சென்னை மண்டலத்தில் 97.36 சதவீதம் தேர்ச்சி..!

Mahendran

செவ்வாய், 13 மே 2025 (12:15 IST)
சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இம்முறை தேசிய அளவில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சென்னை மண்டலம் கணிசமான முன்னேற்றம் காட்டி, 97.39% தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பாகத் திகழ்கிறது.
 
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in மற்றும் cbse.gov.in என்ற இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
 
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.
 
10ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்தன. 12ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றன.
 
முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, கல்லூரியில் சேர்வதற்கான திட்டத்தையும் வகுத்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்