10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

Prasanth Karthick

செவ்வாய், 13 மே 2025 (12:36 IST)

அசாமில் காதலனுடன் சேர தடையாய் இருந்த 10 வயது மகனை தாயே கொன்று சூட்கேஸில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியை சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி. இவர்களுக்கு ம்ரின்மாய் என்ற 10 வயது மகன் உள்ளான். ம்ரின்மாய் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சமீபத்தில் தனது மகனைக் காணவில்லை என தீபாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

தொடர்ந்து போலீஸார் சிறுவனைத் தேடி வந்த நிலையில் சிறுவன் கொல்லப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தீபாலியின் பதில்கள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்னதாக கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்த தீபாலிக்கு ஜியோதிமொய் என்ற காதலனும் இருந்துள்ளார்.

 

போலீஸார் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து விசாரித்ததில் விவாகரத்திற்கு பின் தனது காதலனுடனான வாழ்க்கைக்கு மகன் தொல்லையாக இருப்பான் என கருதியதால் தீபாலியும், அவரது காதலனும் சேர்ந்து 10 வயது மகனை கொன்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்