எடப்பாடியை முதல்வர் ஆக்கியதே பாஜக தான்: நயினார் நாகேந்திரன்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (17:23 IST)
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதே பாஜகதான் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சனைக்கு யார் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே
 
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதே பாஜக தான் என்றும் பாஜக அதிமுக கூட்டணி தற்போதும் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவில் ஏற்பட்ட இந்த பிரச்சனை தற்காலிகமானதுதான் என்றும் விரைவில் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்