மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யனை திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பாராட்டியுள்ளார்.
புதிதாக அமைந்துள்ள திமுக அமைச்சரவையில் அதிக கவனத்தைப் பெற்றவராக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் உள்ளார். கொரோனாவை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு பாதிப்பு எண்ணிக்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர் இப்போது தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பணிகளை மேற்பார்வையிட்ட அவர் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு நடந்தே சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இது அனைவரின் கவனத்தையும் பெற்றது. இதுபற்றி திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மா.சு.வின் கால்கள் மான்களின் கால்கள். அடர்ந்த வனப்பகுதியில் உயர்ந்த மலையின் உச்சியில் பதினைந்து கிலோமீட்டர் நடந்து மக்கள் குறைகேட்ட அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள் என பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.