புதிய வேலைவாய்ப்பு முகாம்கள் … முதல்வர் முக ஸ்டாலின்

செவ்வாய், 27 ஜூலை 2021 (20:29 IST)

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொரொனா சமயத்தில் பதவியேற்ற குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்பட்டதாக சமீபத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்வகையில் தமிழகத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தப்பட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று சென்னையிலுள்ள தலைமைச் செயல்கத்தில் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், புதிய தொழிற்நுட்ப நிலையங்கள் தொடங்கவேண்டுமெனவும், அவற்றில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளை அறிமுகம் செய்யவேண்டும் எனக் கூறினார்.

5 more Zika virus infections

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்