நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் மறுமார்க்க ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஏய் அதாவது ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை மாலை 4. 35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று காலை 7:45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
இந்த இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய பணம் திரும்ப அனுப்பப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று மாலை கிளம்ப வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் ரயில் ரத்து என காலையில் அறிவிக்கப்பட்டது பயணிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாற்று ஏற்பாடு செய்வதற்கு கூட கால அவகாசம் இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.