ரூ.1000 கோடியில் நவீனமயமாகும் தாம்பரம் ரயில் நிலையம்.. மாதிரி புகைப்படம் வெளியீடு..!

Mahendran

வெள்ளி, 12 ஜூலை 2024 (17:00 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் போலவே தற்போது தாம்பரம் ரயில் நிலையமும் ரயில்கள் வந்து செல்ல முனையங்களாக மாறி உள்ள நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தை ஆயிரம் கோடி ரூபாயில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை புறநகர் பகுதிக்கு மிகப்பெரிய ரயில் நிலையமாக இருக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. மேலும் ஆந்திரா வழியாக வட மாநிலங்கள் செல்லும் ரயில்களும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட தொடங்கிவிட்டன.

இதனால் தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் இந்த ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தற்போது ஆயிரம் கோடி ரூபாயில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நவீன கழிப்பறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்ய இருப்பதாகவும் நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் மற்றும் உணவு வசதி அனைத்தும் மாற போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரயில் நிலையம் அருகே பசுமை பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தாம்பரம் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின் எப்படி இருக்கும் என்பதை குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்