என் ஆதங்கங்களை தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள்: அழகிரி அதிரடி

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (18:34 IST)
எனக்கு பல ஆதங்கங்கள் உள்ளது. அதை எல்லாம் ஆறு மாதத்தில் என் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

 
மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரியிடம் அவரது ஆதங்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு பல ஆதங்கங்கள் உள்ளது. அதை எல்லாம் ஆறு மாதத்தில் என் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
 
ஏற்கனவே திமுகவில் அழகிரி ஆதரவாளர்கள் அவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவுரைப்படி அழகிரி கட்சியில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை திமுக செயற்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் முதல்முறையாக நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்