ஆளுனரை நாங்கள் குறை சொல்லவே இல்லை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (14:45 IST)
ஆளுநரை நாங்கள் குறை சொல்லவே இல்லை என்றும் மசோதாவுக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்கிறார் என்று மட்டுமே கூறினோம் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கூறியுள்ளார்.
 
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திடாததால் அந்த மசோதா காலாவதி ஆகி விட்டதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது குறித்து பேசியபோது, ஆன்லைன் ரம்மியை தடை விதிக்கும் வகையில் இந்தியாவிற்கே முன் மாதிரியான ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என்றும் இந்த சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை என்றும் அரசாணை ஏன் வெளியிடவில்லை என்பதற்கான காரணத்தை ஆளுநரிடம் தெரிவித்து விட்டோம் என்றும் கூறினார்
 
மேலும் ஆளுனரை நாங்கள் குறை சொல்லவில்லை என்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்கிறார் என்று மட்டுமே கூறினோம் என்றும் ஆளுனர் தரப்பிலிருந்து எத்தனை முறை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் துறை அமைச்சர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்