ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான்: திமுக எம்பி கனிமொழி

திங்கள், 28 நவம்பர் 2022 (18:26 IST)
ஆளுநர் கையெழுத்து இடாததால் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் தடை சட்ட மசோதா காலாவதியான நிலையில் தமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியானது தான் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி அமைச்சரவையில் இயற்றப்பட்டது என்பதும் இந்த சட்டத்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆளுநர் இந்த சட்டம் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழக அரசு அதற்கு விளக்கம் கொடுத்தது. ஆனால் ஆளுநர் இன்னும் அந்த விளக்கத்தை பிறகு ஒப்புதல் அளிக்காததால் மசோதா காலாவதியாகிவிட்டது 
 
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறியபோது தமிழகத்தை பொருத்தவரை ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான் என்றும் ஆளுநர் பதவி இல்லை என்றால் இன்று ஆன்லைன் சட்டம் அமலுக்கு வந்திருக்கும் என்றும் அவர் கூறினார்
 
எதை முதலில் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தெரியவில்லை என்றும் ஆளுநர் பதவியே தேவையில்லாத என்று ஒன்று இல்லாவிட்டால் என்று பல சிக்கல்கள் தீர்ந்து விடும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்