வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

Mahendran

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (17:50 IST)
வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும், எந்த விதமான நிபந்தனையும் விதிக்க மாட்டோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"எங்களுக்கு தேர்தல் அரசியல் முக்கியமல்ல; வன்னியர் சமுதாயத்தின் வளர்ச்சிதான் முக்கியம். எனவே, வன்னியர் சமுதாயத்திற்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு என்ற சட்டத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கையெழுத்து போட்டால், அடுத்த நிமிடமே திமுக கூட்டணியில் எந்த விதமான நிபந்தனையும் இன்றி இணைய தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

"எங்களுக்கு மக்களின் வளர்ச்சிதான் முக்கியம். வன்னியர் சமுதாய மக்கள் மட்டும் இல்லை, அனைத்து சமுதாய மக்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் குரல் கொடுக்கிறோம். இதுதான் உண்மையான சமூக நீதி" என்றும் அவர் கூறினார்.

இதனை அடுத்து, அன்புமணியின் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திமுக கூட்டணியில் பாமகவை இணைத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்