தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

Mahendran

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (17:30 IST)
புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் ஏற்கனவே அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில், தற்போது அவருடைய பவுன்சர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புஷ்பா 2 ரிலீஸான அன்று அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்ததால் ஆர்வம் மிகுதியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி என்ற பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர், தியேட்டர் உரிமையாளர் உள்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி, அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையின் முடிவில் பவுன்சர் அந்தோணி என்பவரை போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்தோணி சம்பந்தப்பட்ட தியேட்டரில் அல்லு அர்ஜுன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அல்லு அர்ஜுனின் விசாரணைக்கு பின்னர் பவுன்சரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும், அதுமட்டுமின்றி புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் இடமும் விசாரணை நடக்கும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்