முடியை மாற்ற நினைத்து உயிரை விட்ட நபர்! – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (13:58 IST)
டெல்லியில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த நபர் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஆதர் ரஷீத் என்ற 30 வயது இளைஞருக்கு முடி கொட்டி வந்ததால் அறுவை சிகிச்சை செய்து அதை சரிசெய்ய நினைத்துள்ளார். இதற்காக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு முடிமாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

ஆனால் அதற்கு பிறகு சில நாட்களில் ரஷீத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுநீரகம் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே தலையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் செப்சிஸ் என்ற நோய் அவரை தாக்கியுள்ளது. இதனால் உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கி அவர் இறந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இளைஞருக்கு முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்