தொடரும் மீன் மார்க்கெட் ரெய்டு: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (16:54 IST)
மதுரையில் மீன்களில் ரசாயனம் சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மீன் மார்க்கெட்டில் மீன்களில் ரசாயனம் கலப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் ரசாயனம் கலப்பதை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து அந்த மார்க்கெட்டிலிருந்து 2 டன் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற ரசாயனம் கலந்த மீன்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தனது துறை அதிகாரிகளை தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். கெட்டுப்போன, ரசாயனம் கலந்த மீன்களை வியாபாரிகள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்