மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க கால அவகாசம்.. உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 28 மே 2024 (12:38 IST)
ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் வாங்க கால அவகாசம் அளிக்கப்படுவதாக  உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
 
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக,  பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம் அளித்துள்ள உணவு பொருள் வழங்கல் துறை மே மாதத்திற்கான பருப்பு ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
 
மேலும் அரசின் தீவிர நடவடிக்கையால் தற்போது,  பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றும், எனவே மே மாதத்தில் பருப்பு, பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் ரேஷன் கடைகளில் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசின் இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்