தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2025-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.