20 நிமிடத்தில் 2 பாட்டில் மது குடிக்கும் போட்டி.. பரிதாபமாக பலியான யூட்யூப் பிரபலம்!

Prasanth Karthick

வெள்ளி, 3 ஜனவரி 2025 (16:11 IST)

தாய்லாந்து நாட்டில் நண்பர்களிடம் விட்ட சவாலுக்காக வேகவேகமாக மதுவை குடித்த யூட்யூப் பிரபலம் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தாய்லாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம், யூட்யூப் பிரபலம் காந்தே என்ற 21 வயது இளைஞர். உலகம் முழுவதும் புத்தாண்டை மகிழ்ச்சியாக தொடங்கிய நிலையில் காந்தே ஒரு சவாலோடு தொடங்கியுள்ளார். நண்பர்களோடு புத்தாண்டை கொண்டாட சென்ற காந்தேவுக்கு நண்பர்கள் ஒரு சவால் விட்டுள்ளனர்.

 

அதன்படி, காந்தே 20 நிமிடத்திற்குள் 2 மதுப்பாட்டில்களை முழுவதுமாக குடித்து முடித்தால் ரூ.75 ஆயிரம் தருவதாக சவால் விட்டுள்ளனர். சவாலை ஏற்றுக் கொண்ட காந்தேவும் 350 மி.லி கொள்ளளவு கொண்ட 2 விஸ்கி பாட்டில்களை வாங்கி வேகவேகமாக குடித்துள்ளார்.

 

குடித்து முடித்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மது போதையில் இருந்த அவருக்கு சரியான சிகிச்சைகள் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்