போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறிSDPI கட்சியினர்சாலை மறியல் போராட்டம்!

J.Durai

வெள்ளி, 24 மே 2024 (14:13 IST)
தமிழக அரசு போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி SDPI  கட்சியினர் சிவகங்கை அரண்மனை  வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டம் தொடங்கிய உடனே காவல்துறையினர் அனுமதி பெறாததால் காவல் வாகனத்தை நிறுத்தி கைது செய்ய முயன்றனர் அப்போது காவல்துறையிடம் வாக்குவாதம் ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபடும் முயன்றனர்.
 
ஆனால் போராட்டத்திற்கு  முன் அனுமதி பெறாததால் போலீசார் போராட்டத்தை
தடுத்து நிறுத்த முயன்றனர்.
 
ஆனால் அதனையும் மீறி சாலை மறியல் செய்ய முயன்றதால்  போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
 
இந்த போராட்டத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி ஈடுபட்டதால் அவரையும் போலீசார் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்