குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ஒழிப்போம்.- அமைச்சர் உதயநிதி

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:32 IST)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்புக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் - குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதை தடுப்பது - போக்ஸோ வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டையும் - குற்றவாளிகளுக்கு தண்டனையையும் உரிய காலத்தில் பெற்றுத்தருவது போன்ற அம்சங்கள் தொடர்பான உயர்நிலை ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், நிதித்துறை - உள்துறை - சுகாதாரத்துறை - பள்ளிக்கல்வித்துறை - சட்டத்துறை - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் & அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

போக்ஸோ Act-ன் கீழ் பாதிக்கப்படுவோருக்கு எந்த தாமதமுமின்றி உடனடியாக இழப்பீட்டினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மேலும், தமிழ்நாடு முழுவதும் பதியப்பட்டுள்ள போக்ஸோ வழக்குகளின் விவரம், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் உடல்நல சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் - குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ஒழிப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்