நாம் பேச - எழுத கற்றுக் கொள்ளும் முன்பே விளையாடத் தொடங்குகிறோம். அதனை முறைப்படுத்தி வளர்த்தெடுத்தால் சாதிக்கும் வீரர்களை உருவாக்க முடியும். மேலும், உடலையும் உள்ளத்தையும் சீராக்க தொடர்ந்து விளையாடுவது எல்லோருக்கும் அவசியம்.
இதனை உணர்ந்தே விளையாட்டுத் துறைக்கு தனி அமைச்சகத்தை நம் முத்தமிழ் அறிஞர் அவர்கள் தொடங்கினார்கள். பன்னாட்டு போட்டிகள் - தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை - சர்வதேச விளையாட்டு நகரம் என இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவற்றை வளர்த்தெடுத்து வருகிறார்கள்.