கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்ல 1.30 மணி நேரம் ஆகிறது என்றும் அதன் பிறகு நாங்கள் எப்போது கிளாம்பாக்கம் சென்று எங்கள் ஊருக்கு செல்ல முடியும் என்றும் பயணிகள் புலம்பி வருகின்றனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பயணிகளும் கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக காலை நேரத்தில் அதாவது பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக நேரத்தில் கோயம்பேடு பகுதியில் இருந்து தாம்பரம் செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடி காரணமாக 1.30 மணி நேரம் ஆகிறது என்று பயணிகள் புலம்பி வருகின்றனர். அதன் பிறகு தாம்பரத்திலிருந்து குறைந்தது ஒரு மணி நேரமாகும் என்றும் கிளாம்பாக்கம் சென்றவுடன் பேருந்துகள் உடனே கிடைப்பதில்லை என்றும் பயணிகள் புலம்பி வருகின்றனர்.
சென்னை பேருந்து நிலையம் என்று கூறிவிட்டு செங்கல்பட்டில் பேருந்து நிலையத்தை கட்டி வைத்திருக்கின்றார்கள் என்று சில பயணிகளுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.