கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது தவறு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி இருந்தனர்.
கோயம்பேடு பகுதியில் ஆயிரம் பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதி இல்லை. ஆனாலும் நாங்கள் கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறினால் என்ன அர்த்தம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என அவர்கள் கூறுவது தவறு. ஆம்னி பேருந்துகளுக்காக ஐந்து நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 77 பேருந்துகளை நிறுத்த முடியும்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் உள்ளது. எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.