ரோட்டில் பயணிகளை இறக்கவிடும் ஆம்னி பேருந்துகள்: கிளாம்பாக்கத்தில் நுழைய அனுமதி இல்லையா?

Mahendran

வெள்ளி, 26 ஜனவரி 2024 (11:05 IST)
தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில்  நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நெடுஞ்சாலையிலேயே ஆம்னி பேருந்துகள் பயணிகளை இறக்கி விடுகின்றன என்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் கூறிய போது  கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் நிரம்பியவுடன் பேருந்து நிலையத்திற்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை 
 
எனவே வேறு வழியில்லாமல் நாங்கள் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகிறோம்.  இது குறித்து நாங்கள் விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் எங்களுக்கான வசதிகளை செய்து கொடுத்தால் தான் நாங்கள் கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்த முடியும் என்று கூறினார் 
 
நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிடத்திற்கு பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து டிரைவர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும்  இது குறித்து முன்கூட்டியே தங்களுக்கு எந்தவித தகவலும் சொல்லவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்