கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கான பார்க்கிங்: முக்கிய அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:24 IST)
இன்று முதல் தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளுக்கான பார்க்கிங் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் என்பதும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் கிளம்பாக்கத்தில் நிறுத்தப்படும். 
 
இந்த நிலையில் ஒரு சில பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தான் கிளம்பும் என்றும் ஒரு பேருந்து கூட கோயம்பேட்டில் இருந்து கிளம்பாது என்றும் தெரிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளுக்கான பார்க்கிங் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி SETC பேருந்துகளுக்கு நடைமேடை 1 முதல் 6 வரை 66 வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் TNSTC பேருந்துகளுக்கு நடைமேடை 7 முதல் 10 வரை 44 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்