இதுகுறித்து அவர் கூறுகையில் "முன்பு எனது கட்சியில் இருந்த சிலரின் அழுத்தம் காரணமாக இரண்டு முறை கூட்டணியை மாற்றும் முடிவை எடுத்தேன். ஆனால் இனிமேல் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமே வராது," என்று உறுதியளித்தார்.
முன்னதாக, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இல்லத்தில், அமித் ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமித் ஷாவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.