இனிமேல் கிளாம்பாக்கம், மாதவரம் தான்.. கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்காது..!

Siva

திங்கள், 29 ஜனவரி 2024 (07:33 IST)
இனிமேல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படாது என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான தென் மாவட்ட பேருந்துகள் அங்கிருந்துதான் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில்  தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்றும் 160 பேருந்துகளின் நடைகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த பேருந்துகளும் இயக்கப்படாது என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மேலும் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்படும், அதன்பின்னர் தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்