கடந்த தேர்தலில் பாஜக 2ஆம் இடம், அதிமுக 3வது இடம்: ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த பாஜக..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (10:29 IST)
சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக 18 வார்டுகளில் இரண்டாவது இடம் பெற்றது என்றும் ஆனால் அதிமுக மூன்றாவது இடத்தில் தான் உள்ளது என்று பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் குறிப்பிட்டுள்ளார். 
 
பாஜகவுக்கு வெறும் 3% ஓட்டுகள் மட்டுமே உள்ளது என்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி 3% ஓட்டு மட்டுமே பெற்றது என்றும் பாஜக எங்களுக்கு தேவையில்லாத லக்கேஜ் என்றும் ஜெயக்குமார் சமீபத்தில் பேசியிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கரு நாகராஜன் கூறிய போது தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அங்கே பாஜகவின் கொடியுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தேர்தலில் 18 வார்டுகளில் பாஜக இரண்டாவது இடத்திலும் அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளது என்றும் அந்த தேர்தலில் மட்டும் சுமார் 9% வாக்குகளை பாஜக வாங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
2016 தேர்தலை மனதில் வைத்து கொண்டு பாஜகவுக்கு மூன்று சதவீதம் ஓட்டு என்று பேச வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்