பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (15:54 IST)
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகிக்கிறார். இந்த  நிலையில்,  அடுத்தாண்டு நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக தயாராகி வரும் நிலையில், சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசனை முன்விரோதம் காரணமாக நேற்றிரவு மர்ம நபர்கள்  கொலைசெய்துவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்