சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்: ரூ.10,000 என அபராதம் உயர்வு?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (10:21 IST)
சென்னை சாலைகளில் மாடுகள் சுற்றி வருவது பொதுமக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது என்பதும் சமீபத்தில் கூட ஒரு பள்ளிச் சிறுமியை மாடு முட்டியதால் அந்த சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை சாலைகளில் மாடுகளை சுற்றித் திரியவிட்டால் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த அபராத தொகையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபராதம் அறிவிக்கப்பட்டும் மாடுகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய வைப்பதால் அபராத தொகையை ரூ.2000ல் இருந்து ரூ.10000 என  உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 
 
இம்மாத இறுதியில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் வரும் அக்டோபர் முதல் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்