தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்? ஒருசில ஊகங்கள்

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (19:30 IST)
மக்களவை தேர்தலின் முடிவை விட தமிழகத்தை பொருத்தவரை 22 சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுகளைத்தான் ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சிகளும், ஏன் பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 22 சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
அதிமுகவுக்கு ஐந்து தொகுதிகளில் வெற்றி கிடைக்காவிட்டால் திமுகவும், அமமுகவும் இணைந்து ஆட்சியை கவிழ்க்கும் என்றும், அதிமுகவை அமமுக எளிதில் கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சியமைக்க தினகரன் ஆதரவு அளிப்பாரா? என்பது சந்தேகமே
 
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்து தமிழகத்தில் படுதோல்வி அடைந்தால் அதிமுகவுடனான கூட்டணி முறிவது மட்டுமின்றி அதிமுகவின் பல அமைச்சர்கள் மீது வழக்குகள் பாயும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்டாலினை முதல்வராக்கி திமுக ஆதரவையும் பெற பாஜக தயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தாலும் பாஜக ஆதரவு கேட்டால் முதல்வர் பதவி, பத்து மத்திய அமைச்சர்கள், அதிமுக அமைச்சர்கள் மீதான நடவடிக்கை ஆகிய டிமாண்டுகளை வைத்து திமுகவும் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க தயங்காது என்றே அக்கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது
 
மேலும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றி கொள்ளவும் ஒருசில அதிமுக அமைச்சர்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்