காவல்நிலையம் முன் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (15:28 IST)
ராஜபாளையத்தில் காவல்நிலையம் முன் கணவன் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ராஜபாளையத்தை சேர்ந்தவர் மதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மதீஸ்வரன் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
 
இந்த சம்பவம் ராஜபாளையம் காவல்நிலையம் முன்பு நிகழ்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாவை பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிரியாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
பொதுமக்கள் மற்றும் காவல்நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்