அணு ஆயுத பலம்: கெத்து காட்டும் பாகிஸ்தான்!

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (15:24 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களது அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றனர். வெடிகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றை அதிக அளவில் வைத்துள்ளனர். மேலும், தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்குதலிலும் சிறப்பான செயல்திறனும் பெற்றுள்ளன. 
 
இந்நிலையில், ஸ்டாக்கோல்ம் என்னும் சர்வதேச அமைதி ஆய்வு மைய நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 10% அதிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்