காமக்கொடூர கணவன் - பிறப்புறுப்பை வெட்ட கூலிப்படை வைத்த மனைவி

திங்கள், 18 ஜூன் 2018 (13:34 IST)
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் பிறப்புறுப்பை வெட்ட மனைவியே கூலிப்படை வைத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்த மருத்துவர் ஷஃபதுல்லா கான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த வாரம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொலை செய்து விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து டாக்டர் ஷஃபதுல்லா கானின் மனைவியிடம் போலீசார் விசாரனை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஷஃபதுல்லா கான் ஒரு பெண் பித்தராகவும், காம கொடூரனாகவும் இருந்துள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார். அதோடு, தனது சகோதரியின் மகளையும் பல நாட்கள் மிரட்டி கற்பழித்து வந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக தனது மகளிடமே பாலியல் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
 
இதனால் கோபமைடைந்த ஆயிஷா, தனது கணவரின் ஆணுறுப்பை வெட்ட வேண்டும் என முடிவெடுத்து அதற்காக ஒரு கூலிப்படையை அணுகியுள்ளார். ஆனால், தவறுதலாக கத்தி மருத்துவரின் நெஞ்சில் பாய்ந்ததால் அவர் மரணம் அடைந்துள்ளார். அதோடு, அவரின் தலையையும் கூலிப்படையினர் தனியாக வெட்டி விட்டனர்.
 
இதையடுத்து ஆயிஷாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்