கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய கணவன் கைது!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (16:59 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில், இளம்பெண் மீது ஆசிட் வீசிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 கோவை ராம நாதபுரத்திலுள்ள காவேரி என்ற  நகரில் வசிப்பவர் சிவக்குமமார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, கவிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கவிதா ஒரு பேருந்தில் சென்றபோது, அருகிலிருந்து பயணியிடம் பணம் பறித்தத குற்றச்சாட்டில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜேஎம் 1 கோர்ட்டில் வழக்கு  விசாரணை நடந்து வருகிறது.

இந்த  நிலையில், ஜெயிலில் இருந்து வெளியே வந்த கவிதாவுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு, கணவரை பிரிந்து, கோவை சூலூரிலுள்ள கண்ணம்பாளையத்தில் வசித்து வருகிறார்.

தன்னுடன் வந்து வசிக்கும்படி, சிவக்குமார், கவிதாவிடம் பலமுறை கேட்டுளார், ஆனால், அவருடன் செல்ல மறுத்துள்ளார் கவிதா, இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருட்டு வக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கவிதாவை பின் தொடர்ந்து வந்த சிவக்குமார்,  மீண்டும் கவிதாவை தன்னுடன் வருமாறு கெஞ்சியுள்ளார், ஆனால் கவிதா வரமறுத்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த சிவக்குமார், தான் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றினார்.

இதில், கவிதாவின் உடல் முழுவதும் ஆசிட் பட்டு எரிந்தது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்து, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோர்ட் வளாகத்திலிருந்து தப்பியோட முயன்ற சிவக்குமாரை கைது செய்த போலீஸார், விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்