''மதுபானம் அத்தியாவசிய பொருளா? '' உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

வியாழன், 23 மார்ச் 2023 (15:49 IST)
விருதுநகர் மாவட்டத்தில் மதுபானக்கடையை அகற்றக்கோரி தாக்கல் செய்த வழக்கில் மதுபானம் அத்தியாவசிய பொருளா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலூக்காவில் உள்ள வாகைக்குளம் கிராமத்தில் இயங்கிவருகின்ற மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதது.

இந்த மதுக்கடையைச் சுற்றிலும் பல வீடுகள், பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிதிது வருவதால், மோதல் ஏற்படுவதாகவும்,. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சிறுவர்கள், பெண்கள் அந்தப் பகுதியின் வழியே சென்று வருவதால், இதை அகற்ற   வேண்டுமென்ற இந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,  மதுபானக் கடை சார்பில், அரசு அனுமதி பெற்று இயங்கி வருவதாகவும், 20 கிமீ சுற்றிலும் வேறு எந்த மதுபானக் கடையும் இல்லை என்று கூறினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 20 கிமீ தொலைவில் வேறு மதுபானக் கடைகளே இல்லை. இந்தக் கடைதான் உள்ளது என்று கூற மதுபானக் கடை அத்தியாவசிய தேவைப் பொருளா என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் நிர்வாக அலுவலர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்