இந்தியாவில் 6ஜி சேவை.. பிரதமர் மோடி அறிவித்த முக்கிய அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (16:54 IST)
இந்தியாவில் சமீபத்தில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பதும் இந்த சேவை படிப்படியாக பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் சுமார் 30 நகரங்களுக்கு மேல் தற்போது 5ஜி சேவை வசதி உள்ளது என்பதும் அதேபோல் நூற்றுக்கணக்கான இந்திய நகரங்களிலும் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமான 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 6ஜி சேவை தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் 6ஜி சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
5ஜி சேவையே மிகப்பெரிய வேகத்தில் இன்டர்நெட் வசதியை வழங்கும் நிலையில் 6ஜி  வந்தால் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்