தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (18:14 IST)
இன்று, சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு  பாஜகவினரும் அதிமுகவினரும் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் தற்போது சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அமித் ஷா, உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழியில் எனக்குத் தெரியாது என்பதால் என்னால் பேசமுடியவில்லை. அதற்கான நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகம் அனைத்து திட்டங்களிலும் முன்னிலை வகிக்கிறது எனவும், கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது எனவும்,  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களுகு தமிழகத்தைப் போல் வேறு எந்த  மாநிலமும் பாதுகாப்பு வழங்கவில்லை எனப் புழகராம் சூட்டியுள்ளார்.

இதற்கு முன் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும்  துணைமுதல்வர் ஒ. பன்னீசெல்வம் இருவரும் வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்