அமித்ஷாவை நோக்கி பதாகை வீச்சு… கூட்டத்தில் பரபரப்பு…

சனி, 21 நவம்பர் 2020 (16:07 IST)
சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா மீது பதாவை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா , சென்னை விமான நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது அவர் மீது பதாகை வீச முயன்ற நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வழக்கத்திற்கு மாறாக பாஜகவை விட அதிமுகவினர் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்