விக்கெட்டை தூக்கிய பாஜக: அமித்ஷா வருகை அதுவுமா சிறப்பான சம்பவம்!

சனி, 21 நவம்பர் 2020 (10:34 IST)
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைகிறார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது. 
 
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துக்கொண்டு பின்னர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக்கொள்ள உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.  
 
இன்று அமித்ஷா வரும் நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்திப்பு நடத்தினார். இதனைத்தொடர்ந்து இவர் தற்போது பாஜகவில் இணைய உள்ளார். 
 
அமித்ஷா வரும் நாளான இன்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் பாஜகவில் இணையவுள்ளது பாஜகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்