13 மாவட்டங்களில் கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (09:09 IST)
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய போகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது என்பது குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்