கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர் விளக்கம்..!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. 
 
ஆனால் சென்னை மாவட்ட கலெக்டர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகளில் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
சென்னையில் நேற்று இரவு விடியோ விடிய கனமழை பெய்தது அடுத்து பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக உள்ளனர். 
 
எனவே இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அனைத்து சாலைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்