கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

Siva
புதன், 27 நவம்பர் 2024 (08:05 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இன்று நடைபெற உள்ள சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை என்றும் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்