கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.