காலதாமதமாகும் பள்ளிகள் திறப்பு! – பாடங்களை குறைக்க திட்டம்!

Webdunia
புதன், 27 மே 2020 (08:35 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் பள்ளிகல் திறப்பு தாமதமாகி உள்ள நிலையில் பாடத்திட்டங்களை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் இந்த முறை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்த முடியாது என்பதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தொடக்கப்பள்ளி வகுப்புகள் காலையிலும், நடுநிலை, உயர்நிலை வகுப்புகள் மதியத்திலும் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

பள்ளிகள் காலதாமதமாக தொடங்குவதை கருத்தில் கொண்டு தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை மூன்று பருவங்களாக நடைபெற்று வரும் தேர்வுகளில் ஒரு பருவம் கைவிடப்படலாம் என தெரிகிறது. அதே போல 10 முதல் 12 வகுப்புகள் வரையிலும் உள்ள பாடத்திட்டங்களிலும் கணிசமான பாடங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்