தமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட், செப்டம்பரில் துவங்க வாய்ப்பு

செவ்வாய், 26 மே 2020 (19:21 IST)

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது . ஏற்கனவே மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில் பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் கருத்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது. அதேசமயம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
 

இந்நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள்  ஜூலை இறுதிவரை இருக்கும் என தெரிகிறது.

மேலும், ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை துவங்கப்படும் எனவும்  6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும்  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் துவங்கப்படும்ம் என தெரிகிறது. 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்