காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (21:27 IST)
நீண்ட கால வழக்குக்கு பிறகு கிடைத்த தீர்ப்பின்படி இந்திய அரசின் ஒப்புதலோடு நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் இன்று நடந்தது. 
 
இது குறித்து  காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் பின்வருமாறு கூறியுள்ளார். நதிநீர் பகிர்வுக்கான விதிகள், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முறைப்படி தேவையான தனி அலுவலகம், உள்கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
நீர் வரவு மற்றும் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்த பல்வேறு தரவுகளை பராமரிக்கும் வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம். 
 
ஜூலை மாதம் தண்ணீர் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஆணையம் விவாதித்தது. ஜூலை மாதம் எவ்வளவு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதை கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
அதன்படி ஜூன் மாதம் தமிழகத்துக்கு திறந்துவிட்ட தண்ணீரின் அளவை கணக்கில் எடுத்துக்கொண்டு ஜூலை மாதம் தர வேண்டிய தண்ணீரில் இருந்து அந்த அளவை கழித்துக்கொண்டு மீதமுள்ள டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்