ராயபுரத்தில் மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து: விரைந்தது தீயணைப்பு படை!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:07 IST)
ராயபுரத்தில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை ராயபுரத்தில் உள்ள மூன்று அடுக்கு கட்டிடம் ஒன்றில் சற்று முன்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் முதல் தளத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த தீ பயங்கரமாக பரவி இரண்டாவது தளத்திலும் பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 இரண்டாவது தளத்தில் உள்ள ரத்த வங்கியில் தீ பரவியதால் சேமித்து வைக்கப்பட்ட பாட்டில்கள் சேதமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது
 
 இந்த நிலையில் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார் வருவதாகவும் தீயை அணைக்க போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்