சிம்புவின் பீப் பாடல் வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

புதன், 16 பிப்ரவரி 2022 (17:41 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு சிம்பு கம்போஸ் செய்த பாடலொன்றில் பீப் என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததை அடுத்து அவர் மீது சரமாரியாக விமர்சனங்கள் எழுந்தன
 
மேலும் இதுகுறித்து கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை மாஜிஸ்திரேட் விசாரணை செய்ததில் சிம்புக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து சிம்பு விடுபட்டு விட்டார் என்பது உறுதியாகி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்