தீக்குண்டத்தில் 1 வயது குழந்தையுடன் நெருப்பில் விழுந்த தந்தை...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (20:35 IST)
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர். தன் கிராமத்தில் உள்ள  திரவுபதி அம்மன் கோவிலுக்குக் கடந்த ஆடி மாதம் காப்பு கட்டி விரதம் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தன் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திரெளபதி அம்மனுக்கு ஆடி 10 ஆம் நாளான நேற்று, தன் ஒரு வயது குழந்தை தரணிஜாவை தூக்கிக் கொண்டு கோயில் இருந்த தீக்குண்டத்தில் இறங்கினார் ராஜா. அப்போது, அவர் கால் தடுக்கி நெருப்பில் குழந்தையுடன் விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், குழந்தைக்கு 36 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்